Header

காலி முகத்திடல் பற்றிய யாரும் அறியாத தகவல்கள்

கொழும்பில் உள்ளவர்களும் கொழும்புக்கு சுற்றுப் பயணமாக வருபவர்களும் கண்டிப்பாக போய் பார்க்க ஆசை படும் இடம்தான் இந்த காலி முகத்திடல். இன்று ஒரு பொழுது போக்கு இடமாக இருக்கும் இந்த காலிமுகத்திடல் ஒரு காலத்தில் கிரிக்கெட் மைதானமாகவும், குதிரை பந்தயத் திடலாகவும் இருந்தது என்றால் உங்களால் நம்பமுடியுமா ?ஆம் இதை விட இன்னும் பல சிறப்பான தகவல்கள் காலி முகத்திடல் பற்றி உண்டு. அவை எவை என இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

1859 ஆம் ஆண்டு ஆளுநராக இருந்த சேர் ஹென்றி ஜோரோஜ் என்பவரின் எண்ணக்கருவால் தோன்றியதுதான் இந்த காலிமுகத்திடல். இன்று நாம் பார்க்கும் அளவை விட மிகப்பெரிய பரப்பளவிலே இது திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கீசரை எதிர்த்து தமது பீரங்கிகளை வைக்க டச்சுக்க்காரர்கள் இந்த இடத்தை முதலாவதாக  பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. டச்சுக்காரர்கள் தான் இந்த இடத்துக்கு காலி முகத்திடல் என்று பெயர் வைத்தார்கள்.

1820 ஆண்டுகளில் இலங்கையினை ஆட்சி செய்த பிரித்தானியர்கள் இந்த இடத்தை குதிரை பந்தய திடலாக மாற்றி பல போட்டிகளையும் நடத்தினார்கள்.அப்போது இந்த இடத்தின் பெயர் கோல்பிட்டி குதிரை பந்தயத் திடல் என்று அறியப்பட்டதாம். 1893 ஆம் ஆண்டு வரை அதாவது குதிரை பந்தயங்கள்  Colombo Racecourseக்கு மாற்றப்படும் வரை இங்கு போட்டிகள் நிகழ்ந்ததாக அறியக்கிடைக்கிறது.

A #vintage picture of #GalleFaceHotel in the late 1800's. #Travel #beach  #hotel #history #srilanka #colombo | Heritage hotel, British colonial,  Oriental hotel

1879 ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுதான் கோல்ப்.அந்த நேரம் இலங்கையில் சரியான கோல்ப் மைதானம் இல்லாத படியால், காலிமுகத்திடலை தங்களது கோல்ப் மைதானமாக தேர்வு செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகரித்த காரணத்தினாலும், காலி முகத்திடல் வேறு வேறு விளையாட்டுக்கும் பயன்படுத்தப் பட்டதாலும், கோல்ப் மைதானம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

Golf Tours in Srilanka | Blue Lanka

1879 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி இலங்கையின் முதலாவது ரக்பி போட்டி காலிமுகத்திடலில் தான் இடம்பெற்றது. இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட உதைபந்தாட்ட வீரர்களுடன் உலக ரக்பி வீரர்கள் கலந்துகொண்டார்கள்.

கொழும்பின் பிரபல பாடசாலைகளான றோயல் கல்லூரிக்கும் தோமியன் கல்லூரிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டியும் இந்த காலிமுகத்திடலில் தான் இடம்பெற்றது. இந்த முதலாவது போட்டியில் 56 ஓட்டங்களால் ராயல் கல்லூரி வெற்றிபெற்றது

The Galle Face Green | Cinnamon U

 

logo