Header

அந்தரத்தில் தொங்கும் தூண்

ஆந்திரா கர்நாடக எல்லைப் பகுதியில் ஆமை வடிவிலான கூர்ம மலை உள்ளது. இந்த மலை மீது வீரபத்திரர் ஆலயம். இந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயமாகும் ராமாயண காலத்தில் ராவணனிற்கும் ஜடாயுவிற்குச் சண்டை நடந்த இடமாக இந்த இடம் தான் குறிப்பிடப்படுகிறது. இந்த கோவிலில் 27 அடி நீளம், 15 அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய நந்தியின் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய நந்தி சிலை இது தான். இந்த கோவில் நுழைவு வாயிலில் ஒரு பெரிய நடனமாடும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாட்டியகலைகள் ஒரு காலத்தில் அரங்கேறியிருக்க வேண்டும் அந்த இடத்தில் தான் ஒரு பெரும் அதிசயம் இருக்கிறது. அந்த இடம் முழுவதும் பெரிய பெரிய கல்தூண்கள் நிறைந்ததாக இருக்கிறது. இந்த தூண்களில் ஒரு மூளையில் இருக்கும் தூண் மட்டும் தரையில் இல்லாமல் தூணின் மேற்பகுதி மேற்கூரையிலும் கீழ்ப்பகுதி அந்தரத்திலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. தரைக்கும் அந்த தூணிக்கும் இடையில் ஒரு சிறிய துணியையோ பாப்பரையோ அந்த பக்கம் கொடுத்து அடுத்த பக்கம் வழியாக எடுத்து விடலாம்.

The Hanging Pillar of Lepakshi Temple | Amusing Planet

இந்த தூண் கீழே நிற்காமல் அந்திரத்தில் தொங்குவது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் காலத்திலேயே உலகிலிருந்து பல்வேறு கட்டிடக்கலை வல்லுநர்கள் வந்து இந்த தூணை ஆய்வு செய்தனர். அவர்களால் இந்த தூண் எப்படித் தொங்குகிறது எதற்காகத் தொங்குகிறது என யாராலும் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

இந்நிலையில் 1910ம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளரான ஹாமில்ட்டன் என்பவர் இந்த தூண் தரையில் ஊன்றி நின்றால் என்ன நடக்கும் என்பதைப் பார்க்க விரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும் தனது ஆய்வு குறித்துத் தெரிவித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதியளித்தன் பேரில் தூணைத் தரையில் நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டார். பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தூணைத் தரையைத் தொட வைக்க முடியவில்லை. ஒரு வழியாக ஒரு கட்டத்தின் தூணில் நான்கு முனைகளில் ஒரு முனை மட்டும் லேசாகத் தரையைத் தொட்டது. தூண் தரை தொட்டதும்தான் தாமதம் அந்த மொத்தம் மண்டபத்தின் மேற்கூரையில் கடும் விரிசல் ஏற்படத்துவங்கியது. மற்ற தூண்கள் எல்லாம் லேசாகச் சாயத் துவங்கி பலம் இழந்தது போல மாறின. உடனடியாக அவர் முயற்சியைக் கைவிட்டுவிட்டு தூணைப் பழைய நிலைக்கே கொண்டு வந்துவிட்டார். இந்த ஆய்வின் மூலம் அவர் குறிப்பிட்ட மண்டபத்தின் மேற்கூரையில் மொத்த எடையில் பாதியை இந்த தூண்கள் தான் தாங்கிக்கொண்டிருக்கிறது என்றும் மற்ற எடையைத் தான் மற்ற தூண்கள் தாங்கிக்கொண்டிருக்கிறது என்றும். இந்த தூண் தரையைத் தொட்டல் ஒட்டு மொத்த மண்டபமும் இடித்துவிழுந்துவிடும் என்றும் கண்டுபிடித்தார்.Mystery Behind The Legendary Hanging Pillar of Lepakshi

இந்த ஆய்வு பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எது எப்படி ஒரு பெரிய கல் மண்டபமே ஒரு தொங்கும் தூணில் நிற்கிறது. இந்த கட்டிடக்கலை எப்படி வடிவமைக்கப்பட்டது? இதை வடிவமைத்தவர் யார்? என பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தது.

இதன் வடிவமைப்பு விதிமுறைகள் என்ன? இவற்றை இன்று நம்மால் வடிவமைத்துவிட முடியுமா? இவையெல்லாமே ஒரு தீராத மர்மம் தான்.

logo