
கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் உலக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டன, பிற்போடப்பட்டன. எனினும் இப்போது சில நாடுகள் விளையாட்டு போட்டிகளை சுகாதார கட்டுப்பாடுகளுடன் நடத்தி வருகிறது.
விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் இப்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகள் என்றால் ஒலிம்பிக் போட்டிகள்தான். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இவ்வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிடப்பட்ட படியே ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறுமென சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர் தோமஸ் பச் (Thomas Bach) தெரிவித்துள்ளார். போட்டியில் பங்குபெறும் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்பதையும் Thomas Bach குறிப்பிட்டிருந்தார்
கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த போட்டிகள் கொரோனா தொற்றின் காரணமாக ஒருவருடம் தாமதமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
மொசாம்பிக் நாட்டை தாக்கிய எலோய்ஸ் சூறாவளி
-
உலகின் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை தேடும் ஒரு பயணம் | SATHUR – Official Trailer
0