Header

ட்ரம்பை குறிவைக்கும் ஈரான் தலைவர்- அதிரடி ட்விட் பதிவு !

 

அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த 20 ஆம் திகதி ஜோ பைடன் பதவியேற்றார். இந்த விழாவுக்கு ட்ரம்ப் அழைக்கப்பட்டிருந்த போதிலும் ட்ரம்ப் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. எனினும் அவரின் பதவி இறுதி நாளன்று புதிய அதிபருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார்.

ட்ரம்ப் தனது பதவி காலத்தில் அதிகமான எதிரிகளையே சம்பாதித்து வைத்தார். அதிலும் ஈரான் நாட்டுத் தலைவர் அயோட்டெல்லா அல் கமேனியின் ஆட்சியின்போது ட்ரம்ப் அமெரிக்க இராணுவ ஏவுகணைத் தாக்குதல் மூலமாக ஈரான் புரட்சிகர இராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை தாக்கி கொலைசெய்தார். இதனால் கமேனி நீண்டகாலமாக ட்ரம்ப்மீது அதிருப்தியில் உள்ளார்.

அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் கருத்துக்களைப் பதிவிடும் வழக்கம் உடையவர் கமேனி. ட்ரம்பின் தாக்குதலை குறிக்கும் வகையில் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடும் கழுகுப்பார்வை கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் உருதுவில் சில வரிகள் இருந்தன. “பாக்தாத்தில் இருந்த சுலைமானியை தனது உத்தரவின்மூலமாக ஏவுகணை தாக்குதலில் கொலைசெய்த டொனால்ட் ட்ரம்பை பழிக்குப்பழி வாங்குவது தவிர்க்க இயலாதது. நிச்சயம் பழி வாங்கியே தீருவோம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த சர்ச்சைக்குரிய ட்விட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

காசிம் சுலைமானி கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில் அவருக்கு அரசு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பேசிய ஈரான் சட்டத்துறை தலைவர் இப்ராஹிம், சுலைமானியின் படுகொலைக்கு காரணமானவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo