Header

அவுஸ்திரேலிய அரசோடு மோதும் கூகுள் நிறுவனம்!


கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறுபட்ட துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதிலும் ஊடகத்துறை அதிகமாகவே பாதிக்கப்பட்டது. எனவே, கூகுளில் வெளியாகும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தும்படி ஆஸ்திரேலிய அரசு கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இதனால் இருதரப்புக்கும் மோதல் நிலை உருவானது.

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அவுஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், இணைப்புகள், துணுக்குகள் ஆகியவற்றை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு பிரதி பலனாக செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசு தெரிவித்தது. இது தொடர்பான செனட் விசாரணைக்கு ஆஜரான கூகுள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரிவின் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா, ‘இது சட்டமாக்கப்படும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடல் சேவையை ரத்து செய்வதை தவிர எங்கள் நிறுவனத்துக்கு வேறு வழியில்லை. இது கூகுளை மட்டுமின்றி அவுஸ்திரேலிய மக்களையும் பாதிக்கும்,’ என்று கூறினார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், ‘கூகுள் நிறுவனத்தின் மிரட்டலுக்கு அரசு அஞ்சாது. நாங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைதான் அரசு விதிகளாக உருவாக்கி உள்ளது. இவை நாடாளுமன்றத்தின் மூலம் அரசால் நிறைவேற்றப்பட்டது. அதன்படிதான் அரசு செயல்படும்,’ என்று காட்டமாக பதிலளித்துள்ளார். இதனால், கூகுள் நிறுவனத்திற்கும் அவுஸ்திரேலிய அரசிற்கும் இடையில் மோதல் நிலை அதிகரித்துள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo