
தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகிறது
ஏனைய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தொடர்பில் அவ்வப்போது புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் எந்த புதிய தகவலும் வராமல் இருப்பது ரசிகர்களை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக ‘வலிமை’ படம் தொடர்பில் ஏதாவது புதிய தகவல்கள் இல்லையா என கேட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில் ‘வலிமை’ தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை சரமாரியாக விமர்சனம் செய்து அஜித் ரசிகர்கள் பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
ரசிகர்களின் கோபத்தை அடுத்து அஜீத்தின் மேனேஜர் சமீப்த்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பதும் அதில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் சரியான நேரத்தில் வரும் என்றும் அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவும் என்றும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு நெட்டிசன் ஒருவர் வேற லெவல் எடிட் செய்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அஜித்தின் அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
-
கொரோனா உடையில் 25 கிலோ தங்கம் திருட்டு
-
“சுத்தமா இருந்தா நோய் வந்திடும்” 67 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் நபர்!
0