
2020 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த 7ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வழிமுறைகளை கையாண்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையினர் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்க வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறையை தூண்டு வகையில் செயற்பட்டதாக அதிபர் ட்ரம்பின் ட்விட்டர், பேஸ்புக் வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன.
இதற்கிடையில், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அதிபர், துணை அதிபர் உள்ளிட்டோரின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதிபர் ட்ரம்பின் விபரங்கள் பதிவிடப்பட்டிருந்த கட்டத்திற்குள் ட்ரம்பின் பதவி காலம் முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க அரசு இணையதள பக்கத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் இணையதள பக்கத்தில் டொனால்ட் ட்ரம்பின் பதவிகாலம் 11.1.2021 (நேற்று) இரவு 7 மணி 40 நிமிடம் 41 நொடியுடன் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த பதிவு நீக்கப்பட்டது. அதிபர் ட்ரம்பின் பதவிகாலம் முடிவடைந்துவிட்டது என அரசு இணையதள பக்கத்தில் வெளியான பதிவு குறித்து அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அரசு இணையதள பக்கத்தில் ட்ரம்பின் அதிபர் பதவிகாலம் முடிவடைந்துவிட்டது என வெளியான பதிவு ஹெக்கிங் செய்யப்பட்டதா? அல்லது அதிகாரிகள் வேண்டுமென்றே அவ்வாறு பதிவு செய்தனரா? என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
- மாஸ்டர் பட காட்சிகள் இணையத்தளத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சியில்…
-
வட்ஸ் அப் இன் நிபந்தனைகள் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு!
0