Header

மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவுவதற்கான அறிவியல் காரணங்கள் எதுவும் இல்லை.


இந்தியாவில் பரவிவரும் பறவைக்காய்ச்சல் மனிதர்களையும் பாதிக்க செய்யுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், ‘மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக இதுவரை அறிவியல் பூர்வமான எந்த தகவலும் இல்லை’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைக்காச்சல் பரவிய மாநிலங்களில் கோழி பண்ணைகள், உணவுச்சந்தைகள் ஏனைய விலங்கு பண்ணைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும் பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவதற்கான அறிவியல் காரணங்கள் இல்லாத நிலையில் டெல்லி உட்பட ஏனைய மாநிலங்களின் சந்தைகள், பண்ணைகளை மூட வேண்டாம் எனவும், கோழிப் பண்ணைகளின் விற்பனையையும் தடுக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு கோரியுள்ளது.  இதற்கிடையே ”பறவைக் காய்ச்சல் விஷயத்தில் அனைத்து மாநிலங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo