Header

மாஸ்டர் பட காட்சிகள் இணையத்தளத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சியில்…


இணையத்தளத்தில் மாஸ்ட்டர் திரைப்பட காட்சிகள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். “ஒன்றரை வருட உழைப்பு தயவு செய்து இணையத்தளத்தில் படத்தை பார்க்காதீர்கள்” என மாஸ்டர் திரைப்பட குழுவினர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய், விஜய் சேதுபதி , மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 13 ஆம் திகதி வெளியாகிறது. கொரோனா தொற்று முழுமையாக நீங்காத காரணத்தால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் , கூடுதல் காட்சிகளோடு நாளை படம் வெளியாகிறது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதையடுத்து மாஸ்ட்டர் படத்தின் இயக்குனர் ட்விட்டர் பதிவில்
“ஒன்றரை வருட உழைப்பு தயவு செய்து இணையத்தளத்தில் படத்தை பார்க்காதீர்கள், திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இவ்வளவு பொறுமையாக இருந்தோம். இந்த ஒருநாள் பொறுத்திருங்கள் நாளை மாஸ்டர் உங்களுடையது. நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo