
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வட்ஸ்அப் செயலி அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும். இது வட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வட்ஸ்அப் பயனாளர்கள் வட்ஸ்அப் செயலிக்கு பதிலாக புதிய செயலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்து கொண்ட டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மாஸ்க் , வட்ஸ்அப்க்கு மாற்றாக ‘சிக்னல்’ செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து சிக்னல் செயலி பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பின்லாந்து, ஹொங்கோங், இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் ‘சிக்னல்’ செயலி அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பல நாடுகளில் அப்ஸ்டோரில் இலவச பயன்பாடுகள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சிக்னல் நிறுவனம் ஒரு ஸ்கிரீன் சொட்டை பகிர்ந்து, அதில் வட்ஸ்அப் இரண்டாமிடத்திலும், ‘சிக்னல்’ முதலிடத்திலும் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. சிக்னல் செயலி நிறுவனத்தின் பங்கு கடந்த வியாழக்கிழமை 527 சதவீதமும், வெள்ளிக்கிழமை மேலதிகமாக 91 சதவீதமும் உயர்ந்துள்ளது.
-
மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவுவதற்கான அறிவியல் காரணங்கள் எதுவும் இல்லை.
-
உலகின் மிக நீளமான பாதையில் விமானத்தை இயக்கிய இளம் பெண்
0