Header

போராட்டத்தின் மத்தியில் வெளிவரவிருக்கும் மாதவனின் மாறா (Trailer)

அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் “மாறா”

இது 2015 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடித்து மலையாளத்தில் வெளிவந்த சார்லி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ஜிப்ரானின் இசையில் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி அமேசான் பிரைமில் இது வெளிவரவிருக்குறது.

2015 ஆம் ஆண்டே இந்த திரைப்படத்தில் தமிழ் ரீமேக் உரிமையினை வாங்கி இருந்தது இந்த திரைப்படத்தில் தயாரிப்பு குழு. துல்கர் சல்மான் நடித்த கதாபாத்திரத்துக்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் சித்தரித்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதியில் 2016ஆம் ஆண்டு மாதவன் நடிக ஒப்பந்தமாகியது

First single from Madhavan and Shraddha Srinath-starrer Maara to be out on  this date

ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தை இயக்குனர் A.L. விஜய் இயக்குவதாகவும், கதாநாயகியாக சாய் பல்லவி நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. சில கருத்து முரண்பாடுகள் காரணமாக A.L. விஜய் விலக கல்கி எனும் குறுந்திரைப்படத்தை இயக்கி பெயர்பெற்ற இயக்குனர் திலீப் குமார் இக் குழுவில் இயக்குனராக இணைந்துகொண்டார்.

Maara' is a reinterpretation of Malayalam film 'Charlie': Director Dhilip  intv | The News Minute

நடிகர் மாதவன் தவிர இத்திரைப்படத்தில் ஆரம்பத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகியிருந்த அணைத்து கலைகர்களும் மாற்றப்பட்டு புதிய குழு இயக்குனர் திலீப் தமையில் தெரிவு செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தின் இடையில் மாதவன் சொந்தமாக “ராகெட்ரி: நம்பி விளைவு ” எனும் திரைப்படத்தை இயக்க சென்றதால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடம் தள்ளிபோடப்பட்டது

ROCKETRY - THE NAMBI EFFECT |Official Trailer |31 Interesting Facts||  Sharukh Khan | R Madhwan | - YouTube

இவ்வாறு பல வருட போராட்டத்தின் மத்தியில் இத்திரைப்படம் எதிர்வரும் 8 ஆம் திகதி வெளிவரவிருக்கிறது

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo