Header

நாளை வெளிவருகிறது பல விருதுகளை குவித்த இலங்கை குறுந்திரைப்படம்

மன்னார் மாவட்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற The Border குறுந்திரைப்படம்  நாளை வெளியாகவுள்ளது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப்படகுகளால் மன்னார், யாழ்பாணம், பருத்தித்துறை மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை குறித்து அலசும் இப்படம், பல உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குறுந்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபற்றி பல விருதுகளை வென்றுகுவித்துள்ளது. இக்குறும்படத்தினை பார்வையிட்ட தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களான வெற்றிமாறன், ராம் மற்றும் அமீர் தமது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தத்தக்கது.
இலங்கை தமிழகளின் மனதில் – எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்கள் மேலான நிலைப்பாடு என்ன என்பதை இக் குறுந்திரைப்படம் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளது. இக் குறுந்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தனேஸ்வரன் ஷமீதன்
3 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலையில் உள்ள சரஸ்வதி திரையரங்கில் திரையிடப்பட்டு அனைவருடைய பாராட்டுகளையும் பெற்ற இக்குறுந்திரைப்படம், நாளையத்தினம் Youtube இணையதளத்தில் வெளியாகவுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo