Header

அதிபர் பதவிக்கு தவறாக உரிமை கோரக் கூடாது ட்ரம்பின் அடுத்த ட்விட் பதிவு

 

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் இழுபறி நிலை நீடிக்கும் நிலையில் தேர்தலில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இந்த நிலையில், அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ பைடன் உரிமை கோரக் கூடாது என ட்ரம்ப் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் மேலும் கூறும் போது, “ ஜோ பைடன் தவறான முறையில் அதிபர் பதவிக்கு உரிமை கோரக் கூடாது. அவ்வாறு உரிமை கோரும் பட்சத்தில் நானும் உரிமை கோர முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமெரிக்கா முழுவதும் பல்வேறு மாகாணங்களிலும் ட்ரம்ப் பிரசார தரப்பு வழக்கு தொடுத்துள்ளது. ஆனால், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ட்ரம்ப் தரப்பு குற்றம் சாட்டினாலும் இதற்கான வலுவான ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo