Header

உங்கள் திருமண வாழ்வில் காதல் குறையாமல் இருக்க இத பண்ணுங்க போதும்…!

பயணங்கள்

ஒன்றாக பயணம் செய்யும் தம்பதிகள் பயணங்கள் முடிந்த பிறகும், தங்கள் உறவை வலுப்படுத்தும் பொதுவான குறிக்கோளையும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள். உங்கள் துணையுடன் ஒரு வேடிக்கையான வார பயணத்தைத் திட்டமிட்டு கூட்டிச்செல்லுங்கள். புதிய இடம் மற்றும் புது சூழலில் ஒருவருக்கொருவர் பிணைவதற்கான சரியான சூழ்நிலை. நடைபயணம் என்பது உலகை ஆராய்வதற்கான ஒரு அற்புதமான வழியாகும், மேலும் நீங்கள் இருவரும் ஒன்றாக எதிர்கொள்ளக்கூடிய உண்மையான சவாலாக இது இருக்கலாம். இருப்பினும், ஒரு குழுவாக சவாலை முடிக்க ஒருவருக்கொருவர் ஊக்குவிப்பதே பிணைப்புக்கு உதவும்.

மார்க்கெட்க்கு செல்லுங்கள்

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒருவருக்கொருவர் சரியாக நேரத்தை செலவிட மார்க்கெட்க்கு செல்லுவது ஒரு எளிய மற்றும் அழகான வழியாகும். குறிப்பாக இது உங்கள் மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். நீங்கள் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு சமைக்க இந்நாளை ஒன்றாக செலவிடலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் ருசியான உணவுகளை தயாரிக்கவும், சில சமையல் வலிமையைக் காட்டவும் முடியும். பிடித்தமான நல்ல ருசியான உணவுகளை சமைத்து உண்பது கூட ஒருவித நெருக்கத்தை உங்கள் துணையுடன் ஏற்படுத்தும்.

புகைப்படம் எடுத்தல்

தற்போது புகைப்படத்தின் மேல் அனைவருக்கும் மோகம். உணர்ச்சிகள் நிரம்பிய சில தருணங்கள் வாழ்க்கையில் எப்போதாவதுதான் தோன்றும். அந்த தருணங்களை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டால், அந்த புகைப்படத்தை எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும், அந்த அழகான நேரம் உங்கள் கண்முன் வந்துபோகும். திருமணம், பிறந்தா நாள் நிகழ்வு என எல்லா நிகழ்வுகளையும் புகைப்படம் எடுத்து சேர்த்து வைக்கும் பழக்கம் வெகுஜன மக்களிடையே அதிகமாக வந்துவிட்டது. இதில், உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் அதைத் திரும்பிப் பார்த்து, பிற்காலத்தில் அந்த தருணத்தை புதுப்பித்து, நீங்கள் ஒன்றாகக் கழித்த அழகான நேரத்தை நினைவூட்டலாம். அது இன்னும் உங்கள் உறவுக்கு வலு சேர்க்கும்.

ஒன்றாக சமைக்கவும்

உங்கள் துணையுடன் சேர்ந்து ஒன்றாக சமையல் செய்ய முயற்சி செய்வது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. நீங்கள் விரும்புமும் உணவுகள் மற்றும் இதுவரை சுவைக்காத சில சமையல்களை துணையுடன் சேர்ந்து சமைக்கலாம். இது உங்களுக்கும் இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் இருவரும் அனுபவிக்கும் அன்புடன் உணவை உருவாக்க இது ஒரு சூப்பர் வேடிக்கையான வழியாகும். நீங்கள் ஒரு சமையல் போட்டியை கூட நடத்தலாம். அங்கு ஒருவர் இனிப்பையும் மற்றொன்றை பிரதான உணவாகவும் செய்யலாம். வெற்றியாளர் யார் என்பதை உங்கள் நண்பர்கள் தீர்மானிக்கலாம்.

சதுரங்க விளையாட்டு

உலகளவில் விரும்பப்படும், அறிவார்ந்த தூண்டுதல் விளையாட்டு சதுரங்கம். இந்த விளையாட்டை உங்கள் துணையுடன் சேர்ந்து விளையாடலாம், இன்னும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கொருவர் ஏதாவது பந்தையம் வைத்து விளையாடலாம். வெற்றி பெற்றவர்களுக்கு தோல்வியடைந்த துணை ஏதாவது செய்ய வேண்டும் என்றும் வேடிக்கையாக விளையாடலாம். இதனால் அன்புமும் பலமடங்கு பெருகும். உங்கள் துணையுடன் சேர்ந்து புதிய பொழுதுபோக்குகளை முயற்சிப்பது மற்றும் ஒன்றாகச் செயல்களைச் செய்வது இருவருக்குள்ளும் பிணைப்பையும், உறவையும் வலுப்படுத்தும். புதிய பொழுதுபோக்குகளை செய்ய முயற்சிப்பது, உங்கள் உறவில் ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தாது. உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையிலும், அன்பிலும் குறையில்லாமல் மகிழ்ச்சியாய் செல்லும்.

logo