Header

தினமும் 1000 பேரை பொழுதுபோக்கிற்காக கொன்ற கொடூர அரசன்… உலகின் படுபயங்கரமான ஆட்சியாளர்கள்…!

விளாட் டெப்ஸ்

டிராகுலா சுயசரிதை எண்ணுங்கள். விளாட் டெப்ஸ் - டிராகுலாவை எண்ணுங்கள்

சாடிஸ்ட் கிங் என்ற பட்டத்தை பெற்ற வரலாற்றின் கொடூரமான தண்டனை வழங்கும் அரசராக இவர் அறியப்படுகிறார். மனித வரலாற்றில் கொடூரமான சம்பவம் என்னவென்றால், அவர் 20,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தோலுரித்து, வேகவைத்து, கழுத்தை நெரித்து, தூக்கிலிட்டு, உயிருடன் புதைத்து, ஆணியடித்து என பல கொடூரமான வழிகளில் கொன்று குவித்தார். இவரது ஆட்சிக்கலாம் ரோமானியாவின் சோதனைக்காலம் என்று கூறப்பட்டது.

ரஷ்யாவின் ஐவன் IV

Ivan the Terrible - Facts, Achievements & Quotes - Biography

இவர் ஒரு ஈவில் கிங் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் இவர் மக்களை துன்புறுத்துவதை இவர் மிகவும் விரும்பினார். மேலும் ஒவ்வொரு நாளும், சுமார் 500 முதல் 1000 பேர் வரை அவரது படைகளால் அவரது நீதிமன்றத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இன்றும் உலகின் மோசமான அரசர்களில் இவரின் பெயர் தவறாமல் இடம்பெறும்.

கிங் ஃபிரான்

வரலாற்றின் கொடூர மன்னர்கள் | explain psycho Kings | Tanglish News | Tanglish

சுயநலமும், ஆணவமும் ஒருசேர நிறைந்த எகிப்தின் மிக மோசமான சர்வாதிகாரியாக இவர் இருந்தார். அவர் தன்னை கடவுள் என்று அறிவித்து, அவரை ஒரு கடவுளாக நம்பவும் வணங்கவும் மக்களை கட்டாயப்படுத்தினார், அதற்கு மறுத்த மக்களுக்கு அவர் மிகவும் மோசமான மற்றும் பரிதாபகரமான தண்டனைகளை வழங்கினார். புராணக்கதைகளின் படி, அவரது மரணத்திற்கு பிறகு பஞ்சபூதங்கள் அவர் உடலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் விளைவாக, அவரது இறந்த உடல் இன்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மாசிடோனின் அலெக்சாண்டர் III

சிறந்த அலெக்சாண்டர் - சுயசரிதை, தகவல், தனிப்பட்ட வாழ்க்கை. அலெக்சாண்டர் தி  கிரேட் - வெற்றியாளரின் வாழ்க்கை வரலாறு

இவர் தனது ஆட்சிக்காலத்தில் ஆசியா வழியாக வடமேற்கு ஆப்பிரிக்கா நோக்கி தனது படைகளை வழிநடத்தினார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் போர்க்களத்திலும், ஒரு பெரும் லட்சியத்திற்காகவும் வாழ்ந்தார். அவர் அதிகப்படியான மது அருந்துவதிலிருந்தும் அடிக்கடி எழுந்த ஒரு கட்டுப்பாடற்ற மனநிலையினாலும் அவர் அவதிப்பட்டார். அவரின் மோசமான மனநிலையால் அவரது படையை சேர்ந்த பலரும் அவர் கையாலும், போரிலும் இறந்தனர்.

பெல்ஜியத்தின் லியோபோல்ட் II

தினமும் 1000 பேரை பொழுதுபோக்கிற்காக கொன்ற கொடூர அரசன்... உலகின்  படுபயங்கரமான ஆட்சியாளர்கள்...! | Cruellest Kings In Human History - Tamil  BoldSky

இவர் பெல்ஜியத்தின் அரசராக இருந்தார், காங்கோ சுதந்திர அரசை மிருகத்தனமாக சுரண்டியதற்காக இவர் நன்கு அறியப்பட்டவர், ஏனெனில் அவரது கட்டாய உழைப்புக் கொள்கையின் விளைவாக 3 மில்லியனுக்கும் அதிகமான காங்கோ மக்கள் இறந்தனர். மக்களின் உழைப்பை உறிஞ்சுவதில் உலகின் மற்ற அரசர்களை விட இவர் கொடூரனமானவராக இருந்தார்.

அட்டிலா தி ஹன்

Attila the Hun - Ancient History Encyclopedia

இவர் மனித வரலாற்றின் தீய ஆட்சியாளர்களில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். அவரது கடைசி படையெடுப்புகள் இரத்தக்களரிப் போராக நினைவுகூரப்பட்டுள்ளன, ஏனெனில் அவர் கிராமப்புறங்களை ஆக்கிரமித்து, கிராம மக்கள் அனைவரையும் படுகொலை செய்தார். அவர் படையெடுக்கும்இடத்தில் இருக்கும் ஒருவரையும் உயிரோடு விடமாட்டார்.

செங்கிஸ் கான்

Genghis Khan - Descendants, Empire & Facts - HISTORY

இவர் மங்கோலியத் தலைவராக இருந்தார், இராணுவ அமைப்பு, அரசியல் தந்திரம் மற்றும் இரத்தவெறி பயங்கரவாதத்தால் புகழ் பெற்றவர். இவர் ஒவ்வொரு போருக்குப் பிறகும் பிழைத்தவர்களின் குறிப்பிட்ட உயரத்தை வெட்டிவிடுவார் என்று நாட்டுப்புற கதைகள் உள்ளது. இவர் 40 மில்லயன் மக்களின் இறப்பிற்கு காரணமாக இருந்தார்.

மாக்சிமிலியன் ரோபஸ்பியர்

ஜேக்கபின் கிளப் என்றால் என்ன. ஜேக்கபின்ஸ்

இவர் ஒருபோதும் தன்னை சுற்றியிருந்தவர்களை நம்பாமல் இருந்தார், அதனால் அவர் தான் சந்தேகப்படும் அனைவரையும் எந்தவித விசாரணையும் இல்லாமல் தலையை துண்டித்தார். ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக சுமார் 5 மில்லியன் மக்களை அவர் தலை துண்டித்தார்.

logo