Header

இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பீர்கள்..!

பப்பாளி

காலை நேரத்தில் நீங்கள் பப்பாளியை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் ஏராளமான நன்மைகள் நடக்குமாம். குறிப்பாக முக அழகு கூடுதல், செரிமான பிரச்சினை, அழுக்குகள் வெளியேற்றம் ஆகிய நன்மைகள் உடலுக்கு நடக்கும். அதுவும் இதன் மீது எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் அதிக பயன்கள் கிடைக்கும்.

முட்டை

சிறந்த மற்றும் மிக எளிமையான உணவு இந்த முட்டை தான். உங்களின் காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் பல்வேறு நலன்கள் கிடைக்கும். முட்டை நமது ஆரோக்கியத்தை சீராக வைப்பதோடு, உடல் பருமன், முக அழகு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.

கிரீன் டீ

நீங்கள் அதிக இளமையுடன் இருக்க இந்த எளிய டீ உங்களுக்கு உதவும். தினமும் காலையில் எழுந்ததும் காபி, அல்லது வெறும் டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ குடித்து வந்தாலே உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியம் இரு மடங்காக அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேற்சொன்ன உணவுகளை காலை வேளையில் சாப்பிட்டு வந்தாலே முக அழகு இரட்டிப்பாக கூடும். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்.

logo