Header

பால் மற்றும் வாழைப்பழம் இவற்றை சேர்த்து உட்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பாலும் பழமும் சாப்பிடுவது பொதுமக்களிடையே இருக்கும் ஒரு பொதுவான பழக்கம். பாலுடன் அனைத்து பழங்களையும் சேர்த்து சாப்பிட முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். ஏனெனில் பாலுடன் சில பழங்களை சேர்த்து சாப்பிடுவது சில பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தும்.

உடல் எடையை அதிகரிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பெரும்பாலும் வாழைப்பழம் மற்றும் பால் ஒன்றாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கலவையானது ஒரு சிறந்த ஒன்று என்று பலர் நினைத்தாலும், நிபுணர்கள் இல்லையென்று கூறுகிறார்கள்.

நிபுணர்கள் கூறுகையில், நீங்கள் பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக உட்கொள்ள விரும்பினாலும், முதலில் நீங்கள் பால் சாப்பிட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதற்கு 20 நிமிடங்கள் காத்திருக்கலாம். வாழை மில்க் ஷேக் செரிமானத்தைத் தடுக்கிறது மற்றும் தூக்கத்தை சீர்குலைக்கிறது.

ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கலவை பரிந்துரைக்கப்படவில்லை. ஏனெனில் இது சுவாச பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் சளியை உருவாக்குகிறது.

ஆயுர்வேதத்தின்படி, பால் மற்றும் வாழைப்பழம் மிகவும் பொருந்தாத உணவுகளின் பட்டியலில் வருகின்றன. ஒன்றாக உட்கொள்ளும்போது, உணவு கலவையானது செரிமான அமைப்பை குறைத்து, நச்சுக்களை உருவாக்கி சைனஸ் நெரிசல், இருமல், சளி மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்

வாழைப்பழமும் பாலும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், மேலும் சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, இரண்டையும் ஒன்றாகக் கலப்பதைத் தவிர்ப்பது நல்லது. குறைந்தது 20 நிமிட நேர இடைவெளியில் தனித்தனியாக அவற்றை உட்கொள்வது நல்லது. இரண்டு உணவுகளும் அவற்றின் சொந்த பண்புகளைக் கொண்டுள்ளன. அவை தனித்தனியாக உட்கொள்ளும்போது மட்டுமே பல்வேறு வழிகளில் நமக்கு பயனளிக்கின்றன.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo