Header

கோஹினூர் வைரத்தின் சாபத்தால் அழிந்த இந்திய வம்சங்களின் கதை தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் வரலாறு…!

இந்தியாவின் திருடப்பட்ட பொக்கிஷங்களில் மிகவும் முக்கியமானது கோஹினூர் வைரமாகும். கோஹினூர் வைரத்தின் புகழானது எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அழியாது. இது முதன்முதலில் 1306 ஆம் ஆண்டில் மால்வா மன்னரிடமிருந்து எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அவருடைய குடும்பத்தினர் பல நூற்றாண்டுகளாக வைரத்தை வைத்திருந்தனர்.

கோஹினூர் வைரம் பல்வேறு இந்திய மற்றும் பாரசீக ஆட்சியாளர்களுக்கு சொந்தமானதாக இருந்தது, இறுதியில் விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசி என்று அறிவிக்கப்பட்டபோது இது இங்கிலாந்தின் கிரீட நகைகளின் ஒரு பகுதியாக மாறியது. இந்த கோஹினூர் வைரத்தின் வரலாறு எவ்வளவு பெரியதோ அந்த அளவிற்கு அதனை சுற்றியிருக்கும் மர்மங்களும், சாபங்களும் பெரியது. இந்த பதிவில் கோஹினூர் வைரத்தைப் பற்றிய சில மர்மங்களை தெரிந்து கொள்ளலாம்.

கோஹினூர் வைரத்தின் அர்த்தம்

கோஹினூர் இப்போது 108.93 காரட் எடையைக் கொண்டுள்ளது மற்றும் டவர் ஆப் லண்டனில் வைக்கப்பட்டுள்ளது. கோஹினூர் (கோ-இ-நூர்) இந்தியாவிலிருந்து கோல்கொண்டாவில் கொல்லூர் சுரங்கத்தில் இருந்து உருவானது மற்றும் குறிப்பாக ககாதியா வம்சத்தின் ஆட்சியின் போது ராயலசீமா வைர சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டது. கோஹினூர் பின்னர் ஒரு ஆளும் வம்சத்திலிருந்து அடுத்தடுத்த இராஜ்ஜியங்களுக்கு அனுப்பப்பட்டது. வைரத்தின் அசல் பெயர் ‘சமந்திக் மணி’ என்பதாகும், இதன் அர்த்தம் வைரங்களின் இளவரசன் என்பதாகும்.

கோஹினூர் வைர சாபத்தின் தொடக்கம்

1739 ஆம் ஆண்டில் பெர்சியாவின் மன்னரான நாதிர் ஷா இந்தியா மீது படையெடுத்து, வைரத்தை “ஒளியின் மலை” என்று குறிப்பிடுவதாகக் கூறப்பட்டது. “ஒளியின் மலை” என்பதற்கான பாரசீக-அரபு சொற்கள் கோ-இ-நூர். வைரத்தின் மகத்துவமும் அதன் மதிப்பும் ஒரு பேரரசின் சக்தியைக் குறிக்கிறது. “இந்த வைரத்தை வைத்திருப்பவர் உலகத்தை சொந்தமாக்குவார், ஆனால் அதன் அனைத்து துரதிர்ஷ்டங்களையும் பெறுவார்” என்று கூறப்பட்டது. கோஹினூரின் உடைமை கொலை, சித்திரவதை, பேரழிவு மற்றும் துரோகம் மற்றும் கோஹினூர் வைரத்தின் சாபத்தின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது.

கோஹினூர் வைரத்தின் சாபம்

கோஹினூர் வைரத்தின் சாபம் பின்வருமாறு கூறுகிறது,” இந்த வைரத்தை வைத்திருப்பவர் உலகத்தை சொந்தமாக்குவார், ஆனால் அதன் அனைத்து துரதிர்ஷ்ட்டத்தையும் பெறுவார், கடவுள் அல்லது ஒரு பெண் மட்டுமே தண்டனையின்றி அதை அணிய முடியும். ” என்று சாபம் கூறுகிறது. கோஹினூர் வைரத்தை வைத்திருந்த ஆட்சியாளர்களின் வரலாறும் வாழ்க்கையும் வன்முறை, கொலைகள், சிதைவுகள், சித்திரவதை மற்றும் துரோகம் ஆகியவற்றால் நிறைந்தன.

இங்கிலாந்து அரச குடும்பம்

கோஹினூர் வைரத்தின் சாபத்தை மக்கள் நம்பினாலும் இல்லாவிட்டாலும், கல்லின் வரலாறு மறுக்க முடியாதது. பிரிட்டிஷ் ராயல் குடும்பம் கோஹினூரின் சாபத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தது, விக்டோரியா மகாராணியின் காலத்திலிருந்தே கோஹினூர் வைரம் தங்கள் வசம் வந்தபோது, ​​அது எப்போதும் பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் ஆண் வாரிசின் மனைவியிடமே ஒப்படைக்கப்பட்டது.

கோஹினூர் வைரத்தால் அழிந்த வம்சங்கள்

கோஹினூர் வைரத்தின் காலவரிசை மற்றும் பயண வரலாறு என்னவெனில் அடிமை வம்சம் (1206-90), கில்ஜி வம்சம் (1290-1320), துக்ளக் வம்சம் உட்பட கோஹினூர் வைரத்திற்கு சொந்தமான பல வம்சங்கள் இருந்தன. (1320-1413), சையிட் வம்சம் (1414-51), மற்றும் லோடி வம்சம் (1451-1526). இவை அனைத்தும் போர் மற்றும் வன்முறையுடன் முடிவடைந்த க குறுகிய காலமே ஆட்சி செய்த வம்சங்கள் ஆகும்.

முகாலய சாம்ராஜ்ய பயணம்

1526 ஆம் ஆண்டில் கோஹினூர் வைர முகலாய சாம்ராஜ்யத்திற்கு சென்றது, திமுரிட் இளவரசர் பாபர் முதல் பானிபட் போரில் டெல்லி சுல்தான்களில் கடைசியாக இருந்த இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார். முகலாயம் என்பது மங்கோலிய மொழியின் பாரசீக சொல். இந்த வைரமானது மால்வாவின் பெயரிடப்படாத ராஜாவுக்கு சொந்தமானது என்று பாபர் தனது நினைவுக் குறிப்புகளான பாபர்னாமாவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரம் சென்ற பிறகு முகாலய வம்சத்தில் தொடர்ந்து வாரிசு சண்டையால் அரசர்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்பட்டனர்.

முகலாயர்களின் வீழ்ச்சி 1

739 ஆம் ஆண்டில் பாரசீக மன்னர் நாதிர் ஷா முகலாயப் பேரரசின் மீது படையெடுத்து முகலாயர்களை வீழ்த்தி கோஹினூர் வைரத்தை கைப்பற்றினார். அதன்பின் கோஹினூர் வைரம் பெர்சியாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. 1747 ஆம் ஆண்டு நாதிர் ஷா படுகொலை செய்யப்பட்டார், அவரின் பேரரசு சிதற தொடங்கியது. அதன்பின் இந்த வைரத்தை வைத்திருந்த அவரின் வாரிசுகளும் பதவி பறிக்கப்பட்டு கண்கள் பிடுங்கப்பட்டனர்.

சீக்கியர்களின் வீழ்ச்சி

1800-ல் ரஞ்சித் சிங் பேரரசையும் கோஹினூர் வைரத்தையும் வைத்திருந்தார். ராஜா ரஞ்சித் சிங் 1839 இல் இறந்தார், அவருடைய வாரிசுகளுக்கு அவருக்கு இருந்த துணிச்சலும், வீரமும் இல்லை. சீக்கிய இராஜ்ஜியம் பலவீனமடைந்தது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாறிய இந்தியாவை பிரிட்டிஷ் கைப்பற்றியது மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி 1858 – 1947 முதல் இந்தியாவின் கட்டுப்பாட்டைப் பெற்றது. பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் லார்ட் டல்ஹெளசி கோஹினூரை கையகப்படுத்தும் பொறுப்பை பெற்றார்.

பிரிட்டாஷிடம் ஒப்படைப்பு

கோஹினூர் வைரத்தை ரஞ்சித் சிங்கின் வாரிசான துலீப் சிங் இந்திய பேரரசி விக்டோரியா மகாராணிக்கு வழங்க வேண்டும் என்று டல்ஹெளசி ஏற்பாடு செய்தார். கோஹினூர் ஏப்ரல் 6, 1850 அன்று இந்தியாவின் கரையிலிருந்து வெளியேறி, ஜூலை 2, 1850 இல் லண்டனை அடைந்தது.1851 ஆம் ஆண்டில், லண்டனில் ஹைட் பூங்காவில் கோ-இ-நூர் பிரிட்டிஷ் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டபோது பெரிய கண்காட்சி நடத்தப்பட்டது

கோஹினூரின் மெதுவான சாபம்

பிரிட்டிஷ் மன்னர்கள் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் கோஹினூரை வைத்திருந்தனர். இது அதிர்ஷ்டம் மற்றும் சாபத்தின் கலவையாகும். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் விரிவடைந்த பிரிட்டிஷ் பேரரசு சூரியனைப் போல பிரகாசித்தது, இப்போது ஒரு குறுகிய பிரதேசத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கல்லானது மெதுவாக நகரும் கிரகமான சனியை அதிபதியாக கொண்டது. எனவே உரிமையாளரை மெதுவாக பாதிக்கிறது.

கொடிய சாபம்

பொதுவாக இந்த வைரமானது விளைவுகளைத் தொடங்க 10 முதல் 25 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இதனை சுத்திகரிக்கும் முறை தெரிந்தவர்களுக்கு மட்டுமே இது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இல்லையெனில், அது உரிமையாளரை தனது பிரதேசத்தை இழக்கவும், வீட்டு அமைதியைக் குலைக்கவும் செய்யும். பெண்களை பொறுத்தவரை அவர்களின் சுயநலத்தை அதிகமாக்கி நற்பெயரை கெடுக்கும்.

ரஞ்சித் சிங்

மகாராஜா ரஞ்சித் சிங் 1813 ஆம் ஆண்டில் இந்த வைரத்தைப் பெற்றார், அது 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் பாதித்தது, மேலும் அவர் 1839 இல் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு அதே ஆண்டில் இறந்தார். 1849 ஆம் ஆண்டில், சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் படைகள் அவரது ராஜ்யத்தை கவிழ்த்தன, அது அவருடைய குடும்ப உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், துலீப் சிங்கின் எட்டு குழந்தைகள் அனைவரும் குழந்தை இல்லாமல் இறந்தனர். அவர்க்ளின் வம்சமே அழிந்தது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo