Header

தினமும் நீங்கள் எத்தனை படிகள் ஏறினால் உங்கள் எடை குறையும்

ஆரோக்கியமாகவும் உடல் வலிமையாகவும் இருக்க ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடந்து செல்வது போதுமானது என்று நாம் அனைவரும் உணர்கிறோம்.

நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு இது போதுமானதாக இருக்கும்போது, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டியிருக்கும். எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒருவராக இருந்தால், ஒவ்வொரு நாளும் நீங்கள் எத்தனை படிகள் நடக்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

கூடுதல் கிலோவைக் குறைக்க ஒருவர் குறைந்தபட்சம் 15,000 படிகள் நடக்க வேண்டும் என்று ஒரு புதிய ஆய்வு காட்டியுள்ளது.

அலுவலக ஊழியர்களின் வாழ்க்கையை தபால்காரங்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 15,000 படிகள் நடந்து செல்லும் தபால் ஊழியர்களின் உடல் நிறை குறைந்ததும் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததையும் ஆய்வில் இருந்து கண்டுகொண்டனர்.

எனவே ஒவ்வொரு நாளும் 15,000 படி ஏறினால் உடல் எடை குறையும் என்று கண்டுபிக்கப்பட்டது. கூடவே இது 2 மணிநேர விறுவிறுப்பான நடைக்கு சமம் என்றும் கண்டுபிக்கப்பட்டது

எப்படி நடக்கலாம்?

உங்களால் தொடர்ந்து நடக்கமுடியாவிட்டால் உங்கள் மேசையிலிருந்து அடிக்கடி எழுந்து உங்கள் வீட்டைச் சுற்றி வாருங்கள் அல்லது வேலைக்கு இடையில் இரண்டு மாடி படிக்கட்டுகளில் ஏறி இறங்குங்கள்.

logo