Header

தள்ளாடும் வயதிலும் கொரோனா பாதுகாப்பு உடையணிந்து அஞ்சல் மூல வாக்கை பதிவு செய்த மூதாட்டி

நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் அமெரிக்க தேர்தலை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் அமெரிக்காவில் அஞ்சமூல வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியிருக்கின்றது . கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக அமெரிக்காவின் ஒரு சில மாநிலங்களுக்கு தபால்மூல வாக்களிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் சிக்காகோ நகரை சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதுகாப்பு உடையணிந்து அஞ்சல் வாக்கை பதிவு செய்யும் புகைப்படும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

Bea Lumpkin என்ற மூதாட்டி சிக்காகோ ஆசிரியர் சங்கத்தின் ஓய்வு பெற்ற உறுப்பினராவார். இவர் இந்த வயதிலும் வாக்களிக்கும் காட்சியை சிக்காகோ ஆசிரியர் சங்கம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த மூதாட்டி குறிப்பிடுகையில் தன் வாழ்க்கை வரலாற்றில் எந்த தேர்தலையும் இதுவரைக்கும் தவறவிட்டதில்லையென குறிப்பிட்டுள்ளார்.

logo