Header

உலக மக்கள் தொகையில் 10% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் – மைக்கேல் ரயன்

கொரோனா தொற்று தொடர்பில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு புதிய விடயத்தை நாம் தெரிந்து கொள்கின்றோம். அவை ஒவ்வொன்றும் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி செல்கிறது. இந்நிலையில் உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து விரிவடையும் எனினும் அந்தத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும், உயிா்களை காக்கவும் பல வழிகள் உள்ளன. இதுவரை பலா் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிா்களை காப்பாற்றவும் முடியும்.

தற்போதைய மதிப்பீட்டின்படி, உலக மக்கள்தொகையில் சுமாா் 10% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

logo