Header

போதையில் சலவை இயந்திரத்திற்குள் மாட்டிக்கொண்ட மாணவி

இங்கிலாந்தை சேர்ந்த 21 வயதான பல்கலைக்கழக மாணவி ரோஸி கோல் என்பவர் தனது தோழிகளுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார். மது போதையால் நிதானத்தை இழந்த அவர், விளையாட்டாக சலவை இயந்திரத்தினுள் நுழைந்துள்ளார். இதன் போது அவர் அந்த இயந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் இருபது நிமிடங்கள் முயற்சி செய்து அந்த மாணவியை பத்திரமாக மீட்டுள்ளனர். இதன் போது அந்த மாணவி இனி இந்தமாதிரியான ஆபத்தான செயல்களை தான் செய்ய மாட்டேன் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான தகவலை வேல்ஸ் தீயணைப்பு வீரர்களுக்கான இணையதளம் வெளியிட்டுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo