Header

கலிபோர்னிய காட்டுத்தீயினால் 8000 பேர் வெளியேற்றம்

 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பரவியுள்ள காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. முதலில் 700 ஏக்கர் பரப்பளவில் பரவிய தீயினை 1,300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும் நேற்று திங்கட்கிழமை வரையிலும் 5 சதவீத தீ மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செங்குத்தான, கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்கள்,  ஹெலிகொப்டர்கள் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தீ வேகமாக பரவ ஆரம்பித்த நிலையில் தீயணைப்பு வீரர்களை அனுப்ப அரசு விரும்பவில்லை. தீ பரவலுக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிவதால் அப்பகுதியில் உள்ள 8,000 மேற்பட்டோர் வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பற்றி எரியும் காட்டுத் தீயினால் அருகில் உள்ள பால்ம் ஸ்பிரிங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo