
எதிர்வரும் 24 ஆம் திகதி பெரிய விண்கல் ஒன்று பூமியை கடக்க இருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசா, நேற்று இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பூமிக்கு அருகே, 75 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவு அல்லது அதற்கும் குறைவான துாரத்தில் கடக்கவிருக்கும் பாரிய விண்கல், மிகவும் அபாயகரமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் 24ம் திகதி பூமிக்கு அருகே கடந்து செல்ல உள்ளது. இந்த விண்கல்லுக்கு, 2020 என்.டி., என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல், 48 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில், பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விண்கல், 170 மீட்டர் நீளமுள்ளது. 50 இலட்சம் கிலோமீட்டர் துாரத்தில் பூமியை கடக்க இருக்கின்றது. இதற்கிடையே, ‘2016 டி.ஒய், 30 மற்றும் 2020 எம்.இ, 3’ என்ற இரண்டு விண்கற்கள், நேற்று பூமியை கடந்து சென்றுள்ளன. இதில், 2016 டி.ஒய், 30 விண்கல், 54 ஆயிரம் கிலோமீட்டர், வேகத்தில், 34 இலட்சம் கிலோமீட்டர் , தொலைவிலும், 2020 எம்.இ., 3 விண்கல், 16 ஆயிரம் கிலோமீட்டர் , வேகத்தில், 56 இலட்சம் கிலோமீட்டர், தொலைவிலும், பூமியை கடந்து சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0