
தமிழ் சினிமா நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி சொல்லி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி
0