Header

கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முனைகிறது ரஷ்யா

 

கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளுக்கிடையில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் ஒருபுறமிருக்க தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் ஒரே நேரத்தில் குற்றம் குற்றம் சாட்டியுள்ளன. இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கோசி பியர்’ என்று அழைக்கப்படக்கூடிய ‘ஏபிடி29’ ஹெக்கிங் குழு, ரஷ்ய உளவுத்துறையின் ஒரு அங்கமாக இருந்து கொண்டு, தடுப்பூசி உருவாக்கும் கல்வி மற்றும் மருந்து நிறுவனங்களில் தாக்குதல் நடத்துகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

தடுப்பூசி ஆராய்ச்சியை சீர்குலைப்பதை விட, அறிவுசார் சொத்துக்களை திருடுவதற்கான முயற்சி நடைபெறுவதை காண்பதாக இங்கிலாந்து தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கூறுகிறது. இந்த அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து செயல்படுகிறது.

தடுப்பூசி பற்றிய தகவல்களை திருடும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டிருப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் கூட்டாக குற்றம் சுமத்தி இருப்பது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo