Header

ஏ.ஆர்.ரஹ்மானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்

நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் ஆகிய படங்களைத் தொடர்ந்து காட்டுப் புறா திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் ‘வாசனை படம்’ என்று பெயர் எடுத்தவர் இயக்குனரும் , தயாரிப்பாளருமான பாபு கணேஷ். இவர் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் மீது புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 2000 ஆம் ஆண்டில் என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘நான் திரைப்படம் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஆசிய, இந்தியன், யுனிவர்சல் ஆகிய சாதனைகளையும் படைத்தது. “நான்” படத்தை அடிப்படையாக வைத்து இசையமைபாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘லீ மஸ்க்’ என்ற ஆங்கில படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். என்னுடைய கதை கருவை பயன்படுத்தியதற்காக அவரிடம் பல வழிகளில் கேட்டும் அவர் பதிலளிக்கவில்லை. என்னை அவருக்கு நன்றாக தெரியும். என்னுடைய கதைக்கருவை பயன்படுத்தியது எனக்கு பெருமை. இருந்தாலும் அவரால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்னுடைய கதைக்கருவை பயன்படுத்தி காட்டுப்புறா படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கினேன். இதை நம்பிதான் எனக்கு பணம் கொடுத்தார்கள். ஒரு ஆறுத்தலுக்காகவது ஏ.ஆர்.ரஹ்மான் என்னிடம் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், இதுவரை அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதனால், கதைக்கரு திருட்டு என்று லீகலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அதற்கும் பதில் இல்லை. எனவே அடுத்தகட்டமாக காவல்துறை முறைப்பாடு செய்ய இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் .
.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo