Header

சச்சின் பட 2 ஆம் பாகம்??

 

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்ட , வெற்றிநடை போட்ட பல திரைப்படங்கள் 2 ஆம் பாகமாகவும் வெளிவந்தது.அவற்றில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்தன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வந்தன.

தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. விஜய்யின் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார். முதல்வன் 2-ம் பாகம் வரும் என்றும் அதில் விஜய் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த நிலையில் விஜய் நடித்துள்ள சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று அந்த படத்தின் இயக்குனர் ஜோன் மகேந்திரனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.,

அதற்கு பதிலளித்த ஜோன் மகேந்திரன், “சச்சின் படத்தை ரசிகர்கள் இப்போதும் விரும்புகிறார்கள். அதன் 2-ம் பாகத்தில் இளையதளபதியை பார்க்க எனக்கு ஆர்வம் உள்ளது. அது நடந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo