Header

சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா அனுஷ்கா

 

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. தெலுங்கில் இவரது முதல் படமான சுப்பர் 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. தமிழில் இவரது முதல் திரை படம் ‘ரெண்டு’.

அருந்ததி படம் அனுஷ்காவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகளும் குவிந்தன. வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இஞ்சி இடுப்பழகி படத்தில் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கூட்டிய அவரால் பின்னர் அதை குறைக்க முடியவில்லை. இதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைவடைந்தன. தற்போது மாதவனுடன் சைலன்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இணைய தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

கெளதம் மேனன் இயக்கும் புதிய திரைப்படத்தில் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அந்த படம் கைவிடப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்திருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo