Header

விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் – நடிகை அக்ஷரா கௌடா

 

இளையதளபதியின் வெற்றிப்படங்களில் துப்பாக்கியும் ஒன்று. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை அக்ஷரா கௌடா, 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் துப்பாக்கி. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் சத்யன், ஜெயராம், மனோபாலா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்

இந்தப் படம் பெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகை அக்ஷரா கௌடா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

நடிகை அக்ஷரா கௌடா கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். ஹிந்தி , கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆரம்பம் படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்தும் விஜயுடன் துப்பாக்கியில் நடித்தது குறித்தும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பம் படத்தில் நடிக்க சந்தோஷ் சிவன்தான் தனக்கு உதவியதாக இருந்ததாகவும், மேலும் தனக்கு துப்பாக்கி படத்தால் நடந்த ஒரே நல்ல விடயம் தளபதி, முருகதாஸ் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோரோடு வேலைசெய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு மட்டும்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் அந்த வேடத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன், நான் காஜல் அகர்வாலின் தோழியாக நடிக்கிறேன் என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கம் வேறு. நான் திரைத்துறைக்கு புதியவள் , அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. கடினமான உணர்வுகள் எதுவும் இல்லை, இன்றும் அவர்களில் யாராவது என்னை அழைத்தால் நான் வேலை செய்வேன். துப்பாக்கி படத்தில் நடிகர் ஜெயராம் நடிகர் விஜய்க்கு அவரை அறிமுகப்படுத்தி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுவார். இதுதான் அக்ஷரா நடித்த ரோல், இதற்காகதான் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo