Header

அப்பாவிற்கு மகன் எழுதிய நெஞ்சுருகும் கவிதை – “இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா”

 

இன்னும் தமிழ் சினிமா  இவர் கவிதைகளையும், பாடல்களையும் புகழ்ந்துகொண்டிருக்கின்றது. மறைந்து போனாலும் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் நா. முத்துக்குமார். தனது முத்தான வரிகளால் தமிழ் சினிமா பாடல்களில் ஆனந்த யாழை மீட்டியவர் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார். இன்று அவருக்கு பிறந்தநாள். இதையொட்டி அவரது மகன் ஆதவன் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். ஆதவனின் அந்த கவிதை…

“என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா”.

இவ்வாறு மழலை கவிஞர் ஆதவன் முத்துகுமார் தனது தந்தைக்கு கவிதை எழுதியிருக்கிறார்.
பொதுவாகவே முத்துகுமாரின் திரைப்பாடல்களில் உறவுகளின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தியிருப்பார். அவரை போலவே ஆதவன் முத்துகுமாரும் தனது கவிதையில் தந்தைக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo