Header

1 கோடி 23 இலட்சத்து 87 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

 

சீனாவின் வுகானில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று இன்று உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்திருக்கின்றது. தொற்றை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், தொற்று பரவளின் தீவிரம் குறைந்தபாடில்லை. கொரோனா தொற்றினால் உலக அளவில் 1 கோடி 23 இலட்சத்து 87ஆயிரத்து ,828 ஆக உயர்வடைந்துள்ளது. உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 57ஆயிரத்து 405 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 71 இலட்சத்து 87ஆயிரத்து 447 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று 61,300-க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இன்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 32 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,219,999 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 135,822 ஆகவும் பதிவாகியுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo