Header

பாகிஸ்தான் கிருஷ்ணர் கோவில் கட்டுமானப்பணிகள் நிறுத்தம்

 

2018ம் ஆண்டு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. எனினும் இந்து கட்டமைப்பு ஒன்று நாட்டின் தலைநகரில் அமைய கூடாது என்று பாகிஸ்தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கிருஷ்ணர் ஆலயம் அமைப்பதற்கு பிரதமர் இம்ரான் கானின் அரசு முக்கியத்துவம் கொடுத்தது. கடந்த மாதம் இந்த ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பாகிஸ்தானின் ஒரு புதிய மற்றும் சகிப்பு தன்மை சகாப்தத்தின் அடையாளம் ஆக இது அமைந்துள்ளது என அரசு அதிகாரிகள் அறிவித்தனர்.

சில நாட்களுக்கு பின்னர் கோவில் கட்டுமான பணிக்காக 13 இலட்சம் டொலர் ஒதுக்க அரசுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டார். இந்த நிதி ஒதுக்கீடானது, மொத்த தொகையில் 5ல் ஒரு பங்கு ஆகும்.

இதுபற்றி இம்ரானின் கட்சியை சேர்ந்த இந்து நாடாளுமன்றவாதியான லால் சந்த் மாலி கூறும்பொழுது, கோவில் எழுப்புவதற்காக நாங்கள் நிலம் தோண்டும்பொழுது, வெளியுலகுக்கு பாகிஸ்தான் பற்றிய நல்ல தோற்றம் ஒன்றை இந்த கோவில் வழங்கும். நான் முழு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என பிரதமர் கூறினார்.
நாட்டின் தலைநகரில் அமையும் ஓர் இந்து கோவிலானது, அனைத்து மதத்திற்கும் பாகிஸ்தான் இடமளிக்கும் என உலகுக்கு எடுத்து காட்ட போகிறது என்றும் பிரதமர் கூறினார் என லால் கூறியுள்ளார்.

இந்நிலையில் இஸ்லாமிய மத போதகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவில் கட்டுமான பணிகளில் சிக்கல் ஏற்பட்டது கோவிலுக்கான நிதியை தங்களது வரி பணத்தில் இருந்து ஒதுக்குவதற்கு குடிமக்களும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு ஊடக நிறுவனங்களும் வெளிப்படையாக பிரச்சாரங்களை மேற்கொண்டன.

தொடர்ந்து அதிகரித்த அழுத்தத்தினால், அரசு அளித்த வாக்குறுதியான, கோவில் கட்டுமானத்திற்கான நன்கொடை தொகையை வழங்குவதில் இருந்து பின்வாங்கியது. இதனால், காலி நிலத்தில் கோவிலை சுற்றி எழுப்பிய சுவருடன் கட்டுமான பணியை அரசு நிறுத்தியுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo