Header

Tik Tok செயலிக்கு அமெரிக்காவும் தடைவிதிக்குமா?

 

கடந்த மாதம் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக் டொக் , ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

இந்நிலையில், இந்தியாவை தொடர்ந்து டிக் டொக் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்காவும் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறுவத்துறைஅமைச்சர் மைக் பொம்பியோ கருத்து தெரிவித்துள்ளார். டிக் டொக் உள்ளிட்ட செயலிகள் மூலம் பயனாளர்களின் தகவல்களை சீனா உளவு பார்க்கிறது. இந்த செயலிகளை தடை செய்வது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் சீன செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான தகவல்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பார் என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு 46 மில்லியன் பயனாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo