Header

உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 46 ஆயிரத்து 622 ஆக உயர்வு

 

தீவிரமாகும் கொரோனா தொற்று பரவளினால் உலக அளவில் 11,950,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 546,622 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் தொற்று பரவளில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,895,290 பதிவாகியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 45 இலட்சத்து 52 ஆயிரத்து 614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 193 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தொற்று பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றது. அமெரிக்காவில் மொத்த தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 97 ஆயிரத்து 84 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து ,972 ஆகவும் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் இந்நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரேசில் – 66,868
இந்தியா – 20,160
ரஷ்யா – 10,494
பெரு – 10,952

மேலும் சில நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசுவதற்கான அச்சுறுத்தல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo