Header

கராச்சி பங்கு சந்தை தாக்குதலின் பின்னணியில் இந்தியா – இம்ரான்கான்

 

பாக்கிஸ்தான் கராச்சியில், சண்ட்ரிகர் சாலையில் அமைந்துள்ள பங்குச்சந்தை அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் 29ம் திகதி, பயங்கரவாதிகள் நான்கு பேர், தாக்குதல் மேற்கொண்டனர். இதன் போது காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட நான்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருவர் உயிரிழந்ததோடு, 7 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த, பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மக்மூத் குரேஷி கூறியிருந்தார்.

இந்நிலையில், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இதன்போது மும்பையில் என்ன நடந்ததோ அது பாகிஸ்தானிலும் நடக்க வேண்டும் என இந்தியா நினைக்கிறது. நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. கடந்த சில மாதங்களாகவே என் அமைச்சரவைக்கு இந்தத் தாக்குதல் குறித்துத் தெரியும். நான் என் அமைச்சர்களிடத்தில் தகவல் தெரிவித்தேன். நாங்கள் முழுமையாக தயாராக இருந்தோம். சதியை முறியடித்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும் என குறிப்பிட்டார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *