Header

வீடற்றவர்களுக்கு 80 நாட்களாக உதவிவரும் சூர்யா ரசிகர்கள்

கொரோனா தொற்றின் அச்சுறுத்தலால் உலக நாடுகளே கதிகலங்கி நிற்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.

இதில் வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் ஊரடங்கு காலப்பகுதியில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 80 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு உணவளித்து வருகிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

80 நாட்களில் இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *