Header

சீனா நிறுவனங்களுக்கு பொருளாதார தடை

அமெரிக்காவில் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 20 சீன நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க இராணுவம் கடந்த வாரம் வெளியிட்டது. இவை தொழில்நுட்ப மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கருத்துவெளியிட்டுள்ளார்.

சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா அர்த்தமற்ற நிபந்தனைகளை செலுத்தி வருகிறது. தேச பாதுகாப்பு என்ற பெயரில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனிநபருக்கு சொந்தமான நிறுவனங்களை அச்சுறுத்தி வருகிறது. சந்தை பொருளாதாரத்துக்கு எதிரான இந்த செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *