Header

சீனாவில் பரவும் புதிய வைரஸ் – பன்றிகளிடம் ஆய்வு

சீனாவில் பரவ ஆரம்பித்து முழு உலகையும் ஆட்கொண்ட கொரோனாவுக்கே இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், பன்றிகளில் பரவி வரும் புதிய வகை வைரசை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய அறிவியல் இதழில் இது தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

‘பன்றிகளில் பரவி வரும் இந்த புதிய வகை வைரஸ், தொற்று நோயை தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது மரபணு ரீதியாக எச்1என்1 (H1 N1) வைரசிடம் இருந்து வந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் ஜி4 (G4) என அழைக்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் பன்றிகளிடம் சோதனை மேற்கொண்டதில், ஜி4 வைரசால் பன்றிகள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவியதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் விலங்குகளிடம் அதிக தொடர்பில் இருப்பவர்களை கண்காணிக்க அவசர நடவடிக்கைகள் தேவை, என ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *