Header

இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.. தளபதி64 நடிகர் உருக்கம்

நடிகர் விஜய்யின் தளபதி64 படத்தின் ஷூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இருந்து திடீரென மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ் வெளியேற, உடனே அவருக்கு பதில் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இது பற்றி அவர் தற்போது உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய், விஜய் சேதுபதி ஆகியோருடன் நடிக்கவேண்டும் என்பது தன் வாழ்நாள் கனவு என்றும் அது இவ்வளவு விரைவில் நிறைவேறும் என நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் படத்தில் நான் இருக்கிறேன் என இப்போது தான் எனக்கே தெரியும். “வா மச்சான்” என லோகேஷ் என்னை அழைத்தபிறகு தான் எனக்கு தெரிந்தது. அதனால் தான் இதுநாள் வரை என்னிடம் கேட்டவர்களுக்கு நான் தளபதி64ல் நடிக்கவில்லை என கூறினேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *