Header

கைய எவ்வளவு நேரம் கழுவனும் தெரியுமா? இவ்வளவு நேரத்துக்கு கம்மியா கழுவுனா ஆபத்துதான்…!

நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கை கழுவுவதை வழக்கமாக கொண்டிருப்பீர்கள். ஆனால் நாள் முழுவதும் அடிக்கடி இதனை செய்வதை வழக்கமாக கொண்டிருப்பது நல்லது. உதாரணத்திற்கு சாப்பிடுவதற்கு முன், பயணத்தை முடித்த பின், சமைக்கத் தொடங்கும் முன், குப்பைகளை தொட்ட பிறகு, செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு கைகள் கழுவுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

கை கழுவுவதற்கான குறிப்புகள் நீங்கள் பல வருடங்களாக கை கழுவுவதை வழக்கமாக கொண்டிருப்பீர்கள் ஆனால் பெரும்பாலும் அதனை தவறாகவே செய்து வருவீர்கள். கை கழுவும் போது குழாயை திறந்து விட்டு ஓடும் தண்ணீரில் கையை வைக்க வேண்டும். அதன்பின் சோப்பு போட்டு தேய்க்க வேண்டும், உங்கள் விரல்களுக்கு இடையையேயும், நகங்களுக்கு அடியிலும் சுத்தம் செய்யுங்கள். குறைந்தது 20 நொடிகள் கை கழுவ வேண்டும், மீண்டும் தண்ணீரில் கையை கழுவிட்டு கையை சுத்தமாக உலர வைக்கவும். ஈரமான கைகள் அதிக பாக்டீரியாக்களை கவரும் எனவே அதனை செய்யாதீர்கள்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *