Header

படப்பிடிப்பில் இருந்து துரத்தப்பட்ட நடிகர் கார்த்தி !! இந்துக்கள் ஒன்றுசேர்ந்து விரட்டி அடித்ததால் பாதியில் ஓடிய அவலம் !! வீடியோ உள்ளே !!

‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ்(Logesh Ganagaraj) கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கைதி’ படத்தை அடுத்து நடிகர் கார்த்தி(karthi) நடித்து வரும் படம் ‘சுல்தான்’.இந்த திரைப்படம் முகலாய அரசர் சுல்தான் பற்றிய ஒரு வரலாற்று படமாக உள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த மலைக்கோட்டையில் சிவனடியார்கள் கிரிவலம் வந்தனர். ஆனால் சமீபத்தில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.ஆனால் படப்பிடிப்பிற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கிரிவலம் செல்ல அனுமதி இல்லாத போது படப்பிடிப்பிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக அங்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, மலைக்கோட்டையில் இருந்து படக் குழுவினர் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்துடன் விஜய்யின் பிகில் திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த பிரச்சனை இன்னும் எந்தவகையில் செல்லப்போகிறது என்பது தெரியவில்லை.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *