Header

இந்த படம் எனக்கு செட் ஆகுமா? இயக்குனரிடம் விஜய்யே கேட்ட கேள்வி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய்யின் நடிப்பில் வெளியான பகவதி படம் எப்போதும் அவரது ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான படம் தான்.

ஏனெனில் அதுவரை காதல் சம்பந்தமான படங்களில் நடித்து வந்த விஜய், தம்பி பாசம், அதிகமான ஆக்‌ஷன் காட்சிகளை கொண்ட படத்தில் முதன்முறையாக நடித்தது என்றால் அது இப்படத்தில் தான்.

இதை தான் இப்படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அவர் பேசுகையில், பகவதி படம் எப்போதும் எனக்கு ஸ்பேஷல் தான். பகவதி படத்தின் கதையை விஜய்யிடம் கூறிய போது அதிகமான சண்டை காட்சிகள் மற்றும் பஞ்ச் வசனங்கள் இருந்ததால் இது எனக்கு செட் ஆகுமா என குழப்பத்துடன் கேட்டார்.

குறிப்பாக, ஆண்டவன் கொடுக்கிறத யாராலும் தடுக்க முடியாது, அவர் தடுக்குறத யாராலும் கொடுக்க முடியாது என ஒரு வசனம் இருக்கும் அதை விஜய் கேட்டவுடன் இதெல்லாம் எனக்கு ரொம்ப ஓவரா இருக்குண்ணா வேண்டாம்ண்ணா என்றெல்லாம் கேட்டதாக வெங்கடேஷ் கூறினார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo