Header

துப்பாக்கி இடைவேளை காட்சி இவ்வளவு மணி நேரம் எடுத்தார்களா? படத்தின் டெக்னிஷியன் சிறப்பு பதில்

துப்பாக்கி தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படத்தின் மூலம் தான் ஹிட் கூட்டணி விஜய்-முருகதாஸ் இணைந்தனர்.

அதை தொடர்ந்து கத்தி, சர்கார் படத்திலும் பணியாற்றினர், இந்நிலையில் துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சியை யாராலும் மறக்க முடியாது.

அந்த காட்சி குறித்து அப்படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் கூறுகையில் ‘படத்தின் மிக முக்கியமான காட்சி அது.

அதில் 12 பேர் 12 பேரை பின் தொடர்ந்து அவர்களை கொல்ல வேண்டும் என்பதை 10 நிமிடத்திற்குள் புரிய வைக்க வேண்டும்.

ஆனால், அதற்கான காட்சிகள் 14 மணி நேரம் இருந்தது, அதை 10 நிமிடத்திற்கு கொண்டு வந்து எல்லோருக்கும் புரிய வைப்பது தான் சவால்’ என கூறியுள்ளார்.

logo