Header

படக்குழுவுக்கு முன் ரோபோ ஷங்கரை அடித்த தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 21 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். 

மாரி படத்தில் நீங்கள் 2 பேரை அடித்துக் கொண்டே இருப்பீர்கள் என்றார் இயக்குனர். அதில் ரோபோ ஷங்கரும் ஒருவர். ரோபோ ஷங்கர் சைஸ் என்ன, என் சைஸ் என்ன நான் எப்படி அவரை அடித்துக் கொண்டே இருப்பது. இதெல்லாம் சரி வராது படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று நான் ஒத்தக்காலில் நின்றேன்.
இல்லன்னா நம்ம அடித்தால் வாங்குகிற மாதிரி சைஸில் ஒரு ஆளை பாருங்கள் என்றேன். ஆனால் பாலாஜி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ரோபோவையே அடிங்க எல்லாம் சரியாக வரும் என்றார். இதனால் நான் தனியாக ஹோம் ஒர்க் பண்ணினேன். அவ்வளவு பெரிய உருவத்தை நம்பும்படி எப்படி அடிப்பது என்று என தனுஷ் தெரிவித்துள்ளார்.
மாரி 2 படத்தில் தனுஷுக்கு கோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo