Header

விஸ்வாசம் டீஸர் எப்போது? இயக்குனர் சிவாவே அறிவித்தார்

அஜித் ரசிகர்கள் தலயை திரையில் பார்த்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அதனால் அடுத்து அவர் நடிப்பில் வெளிவரும் விஸ்வாசம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

படம் அடுத்த வருடம் பொங்கல் திருவிழாவுக்காக வெளிவரவுள்ளது. இன்று படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்து ரசிகர்களை ஈர்த்துவருகிறது.

இந்நிலையில் இன்று நடந்த ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சிவா விஸ்வாசம் டீஸர் பற்றி ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்னும் 10 நாட்களில் விஸ்வாசம் டீஸர் வெளிவரும் என அவர் கூறியுள்ளார்.

அப்படி பார்த்தால் கிறிஸ்துமஸ்ஸின்போது விஸ்வாசம் டீஸர் வரும் என எதிர்பார்க்கலாம்.

logo