Header

2.0 படத்தில் இருந்து இந்த முக்கியமான காட்சிகளெல்லாம் நீக்கப்பட்டுவிட்டதாம்! வெளியான உண்மை தகவல்

ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 2.0. தமிழ் உலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இப்படத்தை இயக்கியிருந்தார்.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் இருந்து தணிக்கை குழுவால் முக்கியமான மூன்று காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாம்.

1. பிளாஸ்பேக்கில் அக்சய்குமார் ஆடிட்டோரியம் ஒன்றில் செல்போன்களால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி கூறிக்கொண்டிருப்பார். அதன்பின் மனிதர்களை பற்றி சொல்லும் போது அவர்களுக்கு கேன்சர், ஆண்மைக்குறைவு, கருச்சிதைவு போன்றவையும் ஏற்படுவதாக சொல்லுவார், அதை நீக்கியுள்ளனர்.

2.செல்போன்கள் எல்லாம் திருடுபோகும் போது அந்த செல்போனின் ஓனரை காட்டுவார்கள். ஆனால் அதற்கு இடையில் அந்நிறுவனத்தின் பெயர் UNICEL என காட்டப்பட இருந்தது.

3. அக்சய்குமார் அமைச்சரிடம் பேசும் போது, 45 வருடங்களாக என்ற சீனை நீக்கியுள்ளனர். லஞ்சம் என்ற வார்த்தையை மியுட் செய்துள்ளனர்.

logo