Header

யோகி பாபு காதலில் வந்த சிக்கல், தீர்த்துவைத்த நடிகை ஜோதிகா

நடிகர் யோகிபாபு சர்கார், விஸ்வாசம் தொடங்கி தற்போது மற்ற பல சின்ன பட்ஜெட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தலைப்பை பார்த்துவிட்டு இது அவரது நிஜ வாழ்க்கையில் நடந்தது என நினைத்துவிடவேண்டாம். தற்போது ஜோதிகா நடித்துவரும் காற்றின் மொழி படத்தில் தான் இப்படி நடந்துள்ளது.

கதைப்படி ஜோதிகா ஒரு RJவாக இரவு ஷோ ஒன்றை நடத்திவருவார். அதற்கு போன் செய்யும் யோகி பாபு தன் காதல் பிரச்சனை பற்றி விவரிப்பார். ஜோதிகா அதற்கு எப்படி தீர்வு சொல்கிறார் என்பதை காமெடியாக இரண்டு சீன்களில் காட்டியுள்ளனர்.

துமாரி சூலு என்கிற பாலிவுட் படத்தின் ரீமேக்கான இந்த படம் தீபாவளி முடிந்தபிறகு திரைக்கு வரவுள்ளது.