Header

4G வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் நோக்கியா 8110 பனானா போன்

நோக்கியா எனும் நாமத்தில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தும் அதிகாரம் உடைய  எச்எம்டி குளோபல் நிறுவனம், நோக்கியா 8110 எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாழைப்பழ வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது நோக்கியா 8110 பனானா போன் என செல்லமாக அழைக்கப்படுகிறது.

இது பாரம்பரிய கீபோர்ட் முறையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் KaiOS எனும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

இதில் வாட்ஸ்அப், கூகுள், கூகுள் அசிஸ்டெண்ட், கூகுள் மேப்ஸ், பேஸ்புக், அவுட்லுக், டுவிட்டர் போன்ற செயலிகளையும் பயன்படுத்த முடியும். அத்துடன் இது 4G வலையமைப்புக்கு ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *