
உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் பயனர்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் இதில் பல மில்லியன் கணக்கான பயனர்களை அப்புறப்படுத்த உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
அதாவது குறிப்பிட்ட சில மொபைல் சாதனங்களுக்கான ஆதரவை 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கம் வாட்ஸ்அப் நிறுவனம் இடை நிறுத்த உள்ளது. இதன் காரணமாக பல மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் போன் பயனர்கள் தமது மொபைல் சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதியை இழக்கின்றனர்.
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளதன் படி பின்வரும் இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கான ஆதரவை இன்னும் இரண்டு வருடங்களுக்குள் நிறுத்தவுள்ளது.
வாட்ஸ்அப் ஆதரவு நிறுத்தப்பட உள்ள மொபைல் சாதனங்கள்
- ஆண்ட்ராய்டு 2.3.7 ஜிஞ்சபிரட் மற்றும் அதற்கு முன்னைய பதிப்புகள்.
- ஐபோன் 3GS/iOS 6
- விண்டோஸ் போன் 8.0 மற்றும் அதற்கு முன்னைய பதிப்புகள்.
- நோக்கியா சிம்பியன் S60.
- பிளக்பெர்ரி ஓ.எஸ் மற்றும் பிளக்பெர்ரி 10.
0